அரியலூர்:

நீட்-டுக்கு எதிராக தற்கொலை செய்துகொண்ட அனிதா மரணத்தில், தன்னை தொடர்பு படுத்திய பேசியதாக, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு திமுக எம்எல்ஏ சிவசங்கர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதில், அதில்,  தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக முன்னாள் எம்எல்ஏ சிவசங்கர் கோரியுள்ளார்.

அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகிறார். மருத்துவ இடம் கிடைக்கா விட்டால் விவசாயம் படிப்பேன் என்று சொன்ன மாணவி அனிதாவின் மரணம் தற்கொலையா அல்லது அரசியல் காரணங்களுக்காக தற்கொலைக்கு தூண்டப்பட்டாரா என்றும் கிருஷ்ணசாமி கேட்டு வருகிறார்.

அனிதா தற்கொலையில், திமுக முன்னாள் எம்எல்ஏ சிவசங்கரன், கல்வியாளர் கஜேந்திரபாபு ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும் கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டினார்.

டாக்டர் கிருஷ்ணசாமியின் பேச்சுக்கு அனிதாவின் சகோதரர்  மணிகண்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது திமுக முன்னாள் எம்எல்ஏ சிவங்கரும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதில்,  அனிதாவின் மரணத்துடன் தம்மை தொடர்புபடுத்தி பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும், தவறினால்,  தம்மை பற்றி அவதூறு பேசியதற்காக ரூ. 5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் வலியுறுத்தியுள்ளார்.

மாணவி அனிதா அதிக மதிப்பெண் எடுத்து மருத்துவ இடம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வந்ததை தெரிந்து, அவருக்கு ஆதரவாக செயல்பட்டு,  உச்சநீதிமன்றம் வரை சென்று போராடவும் ஊக்கமளித்தவர் திமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ சிவசங்கர் என்பது  குறிப்பிடத்தக்கது.