பாலா மீது குற்றம் சொன்ன அனிதா…..!

பிக்பாஸ் வீட்டில் பால் கேட்ச் டாஸ்கின் அடிப்படையில் போட்டியாளர்கள் தங்களுக்குள் பேசி ரேங்க் கொடுத்துக்கொள்ளவேண்டும் என புது டாஸ்க் கொடுக்கப்பட்டது.

நேற்று நடந்த ரேங்கிங் டாஸ்கில் ரியோ, ரம்யா மற்றும் சோம் ஆகியோருக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இன்றைய நான்காவது பகுதியில் போட்டியாளர்களுக்கு தங்க நிற பந்துகள் அனுப்பப்பட்டன.

பாலாஜி ஒரு கார்டை எடுத்து தன்னுடைய மதிப்பெண்களை 100 அதிகரித்து கொண்டார். அதன் பின் ரம்யா எடுத்த கார்டில் யாராவது ஒருவரது மதிப்பெண்களை பூஜ்யம் ஆக்க வேண்டும் என சொல்லப்பட்டது. அப்போது ரியோவின் மதிப்பெண்களை அவர் பூஜ்ஜியம் ஆக்கினார். அதன் பின் பாலாஜியின் மதிப்பெண்களை கேபி பூஜ்ஜியம் ஆக்கிவிட்டார்.

பிக்பாஸ் வீட்டில் பாலாஜி மற்றும் ஷிவானி இருவரும் மிகவும் நெருக்கமாகவே இருந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவர்களுக்கு நடுவில் சண்டை அடிக்கடி நடக்கிறது.

இந்நிலையில் இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், அனிதா சம்பத் நாமினேஷன் குறித்து பேசுகிறார். அப்போது பேசியவர் பாலாஜியை குறை கூறி பேசியுள்ளார். என்ன காரணம் என்று பாலாஜி கேட்டாலும் அதை விளக்காமல் அவரே பேசி வருகிறார். ஷிவானி தூங்குனத நீங்க சொல்லல பாலா என்று கேட்க, அருகில் இருந்த ஷிவானி அழுவது போன்று ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.