‘ஆணவத்தில் ஆடாதிங்க’ டான்ஸ் மாஸ்டருக்கு அனிதா சம்பத் கணவர் பதில்….!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்.

முதல்வாரத்தில் போட்டியாளர்கள் தங்களது மறக்கமுடியாத கதைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பிக்பாஸ் கட்டளையிட்டதைத் தொடர்ந்து அனிதா சம்பத், தான் கடந்த வந்த பாதையை கண்ணீருடன் உருக்கமாகக் கூறினார்.

இதற்கு ஆதரவாகவும் , சிலர் நேர்மறையாகவும் விமர்சித்து வருகின்றனர் . இந்நிலையில் அனிதா சம்பத் பேச்சில் சோகம் இல்லை என்று தெரிவித்த டான்ஸ் மாஸ்டர் சதீஷ், அவர் வேகமாக பேசுவதாகவும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த ட்வீட்டுக்கு பதிலளித்திருக்கும் அனிதா சம்பத்தின் கணவர் பிரபாகரன், பசி என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்திருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு அடுத்தவர்களது பசியை தெரிய வாய்ப்பில்லை. இப்படித்தான் அடுத்தவர்கள் அனுபவித்த பசி மற்றும் வலியைக் கூட கிண்டல் செய்யத் தோன்றும். டான்ஸ் மாஸ்டர் எனில் டான்ஸ் ஆடலாம். ஆணவத்தில் ஆட வேண்டாம் என்று கூறியுள்ளார்.