பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு நடுவில் பிரச்சனைகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது தெரிந்த விஷயம் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு நடுவில் பிரச்சனைகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், கால் சென்டர் ஊழியராக இருக்கும் ரியோவிடம் அனிதா சம்பத் போன் செய்து பேசுகிறார். அனிதா அடுக்கிய அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளிக்கிறார் ரியோ. டாஸ்க் என்பதால் அமைதி காப்பதாக ரியோ புலம்பி கொண்டு செல்கிறார்.

இந்த கால் சென்டர் டாஸ்கில் சிறப்பாக பேசிய போட்டியாளர்கள் மற்றும் தங்கள் முழு முயற்சியையும் வெளிக்காட்டாமல் இந்த் டாஸ்கை மேற்கொண்டவர்கள் என்ற அடிப்படையில் ஒன்றில் இருந்து 13 வரை வரிசைப்படுத்த வேண்டும் என்கிற டாஸ்க் வழங்கப்பட்டு உள்ளது. இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது.

இந்த ரேங்க் வரிசையை அவர்களே பேசி முடிவெடுக்கவேண்டும் என்பதால் இந்த டாஸ்கில் அதிகம் வாக்குவாதம் மற்றும் பிரச்னையும் வர வாய்ப்பு அதிகம் உள்ளது. யாருக்கு முதலிடம், யாருக்கு கடைசி இடம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.