கரூர்,

மிழகத்தில் நீட் தேர்வு காரணமாக மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றதால், தமிழக பாடத்திட்டத்தில் படித்து 1176 மதிப்பெண் பெற்ற தமிழக மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகத்துக்கு  இந்த ஆண்டு முதல்  நீட் தேர்வில் இருந்து விலக்க அளிக்கப்படும் என்று இறுதி கூறி வந்த தம்பித்துரை,  முதல்வர் எடப்பாடி, அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழக மாணவர்களை வஞ்சித்து விட்டதாக கூறி மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கரூரில் உள்ள  பாராளுமன்ற உறுப்பினரும்,  துணை சபாநாயகருமான மு.தம்பி துரை வசித்து வரும்  குமாரசாமி அபார்ட்மெண்ட் முன்பு கரூர் வெங்கமேட்டை சோ்ந்த தினேஷ்,  குட்டி ராஜா  என்ற இரு இளைஞர்கள் திடீரென அவரதுவீட்டின் முப்பு தர்ணா போராட்டத்தில் இறங்கினர்.

அப்போது,  தமிழகத்தில்  நீட்தோ்வை ரத்து செய்ய வேண்டும், அனிதா மரனத்திற்க்கு தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

இதையறிந்த கரூர் காவல்துறை ஆய்வாளர் பிரிதிவிராஜ், இருவரையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

நீட்டுக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக, தற்போது அதிமுக தலைவர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.