மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் மகள் அஞ்சலி பிர்லா யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி: முதல் முயற்சியில் தேர்வானார்

டெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் மகள் அஞ்சலி பிர்லா,  முதல் முயற்சியில் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 89 வேட்பாளர்களில் இவரும் ஒருவர். அஞ்சலி பிர்லா தனது முதல் முயற்சியிலேயே தேர்வில் வெற்றி பெற்று உள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:

எனது முழு குடும்பமும் சமூகத்திற்கு சேவை செய்து வருகிறது. தந்தை அரசியல்வாதி, தாய் மருத்துவர். மூத்த சகோதரி ஒரு சார்ட்ட்டு அக்கவுண்டன்ட்.  சமூகத்திற்கு சேவை செய்வதற்காக நான் சிவில் சர்வீசை தேர்ந்தெடுத்தேன்.

நான் பரீட்சைக்குத் தயாராகும் காலத்திலிருந்தே முழு குடும்பமும் உதவியது. வாழ்க்கையில் நான் சாதிக்க வேண்டும் என்று உற்சாகம் தந்தனர் என்று தெரிவித்தனர்.