வீட்டிலிருந்தும் மகளை கட்டிப்பிடிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்.. கொரோனா வைரஸ் படுத்தும்பாடு..

துவரை அனுபவிக்காத புதுவிதமான கஷ்டங்களை மக்கள் இந்த கொரோனா வைரஸ் தொற்று தடை காலத்தில் அனுபவித்து வருகின்றனர். ஊருக்கு வந்தவர் திரும்பிசெல்ல முடியவில்லை, வெளிநாடு சென்றவர்கள் நாடு திரும்ப முடியவில்லை. ஊரடங்கு தளர்வுக்கு பின்பே வெளிநாட்டுக்கு சென்றவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். தமிழ், மலையாள படங்களில் நடித்திருக்கும் அஞ்சலி நாயர், டிஜிபூட்டி என்ற மலையாள படத்துக்காக படக்குழுவினருடன் ஆப்ரிகா சென்றார். 70 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கால் அங்கு சிக்கி தவித்தார்.


படக் குழுவினர் அனைவரும் சமீபத்தில் விமானம் மூலம் மீட்டு கேரள அழைத்து வரப்பட்டனர். அஞ்சலி நாயர் வீட்டில் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
’வீட்டுக்குள் தனி அறையில் பூட்டப்பட்டு 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்டிருக்கிறேன் என் மகளை அள்ளி அணைக்க முடியவில்லை. அந்த நாட்களுக்காக காத்திருக்கிறேன் ஒரே ஆறுதல் நான் என் மகள் அருகிலேயே இருக்ககிறேன் ‘ என்றார்.
நடிகை அஞ்சலி நாயர் உன்னையே காதலிப்பேன், இதுவும் கடந்து போகும், நெல்லு போன்ற தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed