‘பப்பி’ படத்தின் “அஞ்சு மணிக்கு” பாடல் வெளியீடு…!

[embedyt] https://www.youtube.com/watch?v=CTW4pqSHH3I[/embedyt]

யோகி பாபு தற்போது “பப்பி” என்ற புது படத்தில் நடித்து வருகிறார். வனமகன், போகன் படங்களை இயக்கிய நட்டு தேவ் இயக்க , ஐசரி கணேஷ் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

வருண் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் வழக்கம் போலவே யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .
தரண்குமார் இசையமைக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது . இது சர்ச்சைக்குள்ளானது. இந்த மோஷன் போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்து நித்யானந்தா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் தன்னுடைய புகைப்படத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார் .

இந்நிலையில் இப்படத்திலிருந்து “அஞ்சு மணிக்கு” பாடலை வெளியிட்டுள்ளனர் . மிர்ச்சி விஜய் எழுதியுள்ள இந்த பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார்.