சுஷாந்த் மாஜி தோழி இரட்டை குழந்தையுடன் பரபரப்பு..

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் காதலி ரியா தற்போது சிக்கலில் இருக்கிறார் சுஷாந்த் சிங் தந்தை கே கே சிங், ரியா மீது புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது.


இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த ‘மணிகர்னிகா’ மற்றும் ‘பாகி 3’ போன்ற படங்களில் நடித்த நடிகை அங்கிதா லோக்ஹண்டே. இவர் நடிகர் சுஷாந்த்தின் மாஜி தோழி. டிவி நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்றபோது சுஷாந்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சுஷாந்த் தற்கொலை செய்து கொணடபோது அங்கிதா வெளியிட்ட உருக்கமான பதிவு ரசிகர்களை உருக்கத்தில் ஆழ்த்தியது.
சமீபத்தில் அங்கிதாவின் சகோதரிக்கு இரட்டை குழந்தை பிறந்தது. அந்த இரட்டை குழந்தை களை தன் கையில் ஏந்தியிருக்கும் படத்தை வெளி யிட்டு,’எங்கள் குடும்பம் சந்தோஷத்தில் மிதக் கிறது. புதிய வாழ்க்கை தொடங்கி இருக் கிறது. இரட்டை குழந்தைகள் பிறப்பால் எங்களின் வாழ்க்கை பெரிதாக உயர்ந்திருக்கிறது. ஆபீர் அபீராவை வரவேற்கிறேன்’ என குறிப்பிட்டிருக் கிறார்.