ஐடிஎஃப் டென்னிஸ் தொடரில் சாம்பியன் ஆனார் இந்தியாவின் அன்கிதா ரெய்னா!

ஜோத்பூர்: ஜோத்பூரில் நடைபெற்ற ஐடிஎஃப் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றார் இந்திய வீராங்கனை அன்கிதா ரெய்னா.

ராஜஸ்தானின் ஜோத்பூரில், பெண்களுக்கான ஐடிஎஃப் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதன் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார் இந்தியாவின் அன்கிதா ரெய்னா.

இவர் துருக்கி நாட்டின் பெர்பு செங்கிஸ் உடன் மோதினார். இதில், 7-5 மற்றும் 6-1 என்ற கணக்கில் வென்று, கோப்பையைக் கைப்பற்றினார் அன்கிதா.

இதே அன்கிதா ரெய்னா, இரட்டையர் பிரிவில் ஸ்னேகல் மானேவுடன் விளையாடி, இரண்டாவது இடத்தைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.