அண்ணா 112ஆவது பிறந்தநாள்: முதலமைச்சர் பழனிசாமி உள்பட அமைச்சர்கள் மரியாதை

சென்னை:  மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின்  112ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்துக்கு முதலமைச்சர் பழனிசாமி உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112ஆவது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும்  கொண்டாடப்படுகிறது.  திமுகவினர்,அதிமுகவினர் ஆங்காங்கே அண்ணா உருவபடம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.
தமிழகஅரசு சார்பிலும், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  சென்னையில், அண்ணாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில், “நெஞ்சிலே வலுவிருப்பின் வெற்றி தஞ்சமென்று உரைத்துவந்து நம்மிடம் கொஞ்சிடுவது உறுதி” – அறிஞர் அண்ணா. அங்ஙனமே ஆகட்டும் என்று பேரறிஞர் அண்ணா அவர்தம் பிறந்தநாளில் அவரை மனதார வணங்கி போற்றுகிறேன் என பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.