ராலேகன் சித்தி

லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாவை அமைக்கக் கோரி அன்னா ஹசாரே நடத்தும் உண்ணாவிரதம் இன்றும் தொடர்கிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டு லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைக்கக் கோரி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் மேற்கொண்டார். சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் கோரிக்கையை அப்போதைய காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது. இதற்கான சட்டங்களையும் அப்போதைய காங்கிரஸ் அரசு இயற்றியது.

ஆனால் லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா இதுவரை அமைக்கப்படவில்லை. லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தாவை அமைப்பதாக தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்த பாஜக அதற்கு பிறகு அதில் சிறிதும் கவனம் செலுத்தவில்லை. அதைப் போலவே பெரும்பாலான மாநில அரசுகளும் இதில் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை.

இதை ஒட்டி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பல முறை கோரிக்கை விடுத்தும் ஒன்றும் நடக்கவில்லை. ஆகவே அவர் நேற்று முன் தினம் தனது சொந்த கிராமமான ராலேகன் சித்தியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார். மகாராஷ்டிர மாநிலஹ்த்டில் லோக் ஆயுக்தாவையும் தேசிய அளவில் லோக் பாலையும் உடனடியாக மைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

இந்த போராட்டத்தின் இரண்டாம் நாளான நேற்று ராலேகன் சித்தியின் மக்கள் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் தொடர்கிறது.