ராலேகான் சித்தி

மகாராஷ்டிர மாநில முதல்வரின் வாக்குறுதியை ஏற்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தனது சொந்த ஊரான ராலேகான் சித்தியின் கடந்த 30 ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார். மத்தியில் லோக் ஆயுக்தா அமைக்கவும் மாநிலங்களில் லோக்பால் ஆமைக்கவும் கோரிக்கை விடுத்து அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வந்தார்.

அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு பலரும் ஆதரவு அளித்தனர். ஏழாம் நாளான நேற்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் அன்னா ஹசாரேவை சந்தித்தார். அப்போது அவர் வரும் சட்டப்பேரவை தொடர் சமயத்தில் லோக்பால் அமைக்கும் புதிய மசோதா அறிமுகப்படுத்தப்படும் என உறுதி அளித்தார்.

அன்னா ஹசாரே அவருடைய உறுதி மொழியை ஏற்றுக் கொண்டார். அதை ஒட்டி அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளார்.  அவருக்கு பழ ரசம் அளித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.