க்ரா

மது இயக்கத்தின் மூலம் இனி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ர்வால் போன்ற நபர்கள் உருவாக மாட்டார்கள் என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்தார்.

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஒரு மாபெரும் சமூக இயக்கத்தை நடத்தி அதன் மூலம் லோக்பால் சட்டம் கொண்டுவர போராட்டம் நடத்தினார்  அந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டு பிறகு ஹசாரேவிடம் இருந்து பிரிந்து ஆம் ஆத்மி கட்சியை ஆரம்பித்தவர் அர்விந்த் கெஜ்ரிவால்.   தற்போது டில்லியின் முதல்வராக பதவி வகித்து வருகிறார்.   அர்விந்த் கெஜ்ரிவாலின் பல நடவடிக்கைகள் அன்னா ஹசாரேவுக்கு பிடிக்கவில்லை என்பது தெரிந்ததே.

கடந்த செவ்வாய்க் கிழமை அன்று ஆக்ராவில் ஒரு பொதுக்கூட்டத்தில் அன்னா ஹசாரே உரையாற்றினார்.  அவர், “என்னுடைய இயக்கம் மற்றும் போராட்டங்களினால் எதிர்காலத்த்தில் அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற நபர்கள் உருவாக மாட்டார்கள் என்னும் நம்பிக்கை எனக்கு உள்ளது.  லோக்பால் என்னும் மக்களின் நீதிமன்ற சட்டத்தை நிறவேற்ற கடும் பாடு பட்டேன்.    ஆனால் அபோது ஆட்சிய் செய்த ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்ட எதையும் நிறைவேற்றவில்லை.   அதன் பின்பு வந்த பாஜக கூட்டணி அரசு அந்த சட்டங்களை நீர்த்துப் போகச் செய்து விட்டது.  மொத்தத்தில் இரு கட்சிகளுமே குற்றவாளிகள் தான்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஜனநாயகம் மலரவில்லை.   மோடி, ராகுல் போன்ற முதலாளிகள் நமக்கு தேவையில்லை.   விவசாயிகள் நலனைப் பேணும் அரசு மட்டுமே தேவை.   இதுவரை லோக்பால் மசோதா நிறைவேற்றப்படாததற்கும், விவசாயப் பிரச்னைகளுக்கு எந்த ஒரு திர்வும் காணாததற்கும் எதிர்ப்பு தெரிவித்து வரும் மார்ச் மாதம் 23 ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடத்த உள்ளேன்.  இந்த போராட்டத்தில் நாடெங்கும் உள்ள விவசாயிகள் அனைவரும் கலந்துக் கொள்ள அழைக்கிறேன்” என உரையில் தெரிவித்தார்.