லோக் ஆயுக்தா : அக்டோபர் 2 முதல் அன்னா ஹசாரே உண்ணாவிரதம்

கமத் நகர்

க்டோபர் 2 ஆம் தேதி முதல் லோக் ஆயுக்தா அமைக்க கோரி அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் அகமத் நகர் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே.  இவர் லோக் பால் சட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்னும் கோரிக்கைக்காக டில்லியில் முன்பு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர் ஆவார்.  அன்னா ஹசாரே தர்போது லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க கடும் முயற்சி செய்து வருகிறார்.

அன்னா ஹசாரே, “பாஜக தலைமையிலான அரசு மத்திய அரசில் பதவிக்கு வர லோக்பால் போராட்டமே காரணமாக இருந்தது.   ஆயினும் ஆட்சி அமைத்து 4 ஆண்டுகள் கழிந்த பிறகும் அரசு லோக் ஆயுக்தா அமைப்பை அமைக்காமல் உள்ளது.  கடந்த நான்கு ஆண்டுகளக, லோக் பால் மற்றும் லோக் ஆயுக்தா ஆகியவற்றை அமைக்காமல் பாஜக அரசு காலம் தாழ்த்தி வருவது கவலையை உண்டாக்குகிறது.

நான் ஏற்கனவே இது குறித்து சென்ற வாரம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன்.    அத்துடன் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்கக் கோரி நான் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளேன்.  எனது சொந்த ஊரான அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகன் சித்தியில் காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2 முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்க உள்ளேன்” எனக் கூறி உள்ளார்.