சென்னை:
ன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி கட்டப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

கன்னியாகுமரி குழித்துறை சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி கட்டப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் அண்ணா சிலை பீடத்தில் கட்டப்பட்ட காவி கொடியை தற்போது அகற்றினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்அண்ணாசிலை அவமதிப்பு குறித்து கண்டனம் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார்.
அதில், தொடர்ந்து செய்யும் தரம் தாழ்ந்த செயல்களால் தரைமட்டத்திற்கு கீழே போகும் அவர்களின் எண்ணம், தங்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ள தனித்தன்மை எதுவும் இல்லாததால் மறைந்த மாமேதை மீது வன்முறை காட்டுகிறார்கள் எனவும் அண்ணா சிலை பீடத்தில் மீது காவிக்கொடி கட்டியவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தயுள்ளார்.
தமிழகத்தில் கந்த சஷ்டி கவசம் கறுப்பர் கூட்டத்தால் இழிவுபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சிலைகளின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.  கடந்த 23-ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் -விழுப்புரம் சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலை மீது  மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.  இந்த நிலையில், தற்போது, கன்னியாகுமரியில் அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி கட்டப்பட்டுள்ளது.