அண்ணா பல்கலை. பொறியியல் செமஸ்டர் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதா? பரபரப்பு

சென்னை:

ண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புகல்லூரிகளில் நேற்று நடைபெற்ற செமஸ்டர் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக புகார்கள் எழுந்துள்ளன. இது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாடு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நவம்பர் டிசம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.  ஆனால் கடந்த மாதம் கஜா புயல் காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ்உள்ள பொறியியல் கல்லூரிகளில், 2வது செமஸ்டர் தேர்வுகள் தற்போது  நடைபெற்று வருகின்றன. பொறியியல் பாடத்திற்கான கணக்கு தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த பாடத்தின் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாகி உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

அதையடுத்து, இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில் தேர்வு வினாத்தாள் வெளியானது உறுதி செய்யப்பட்டால், தேர்வு ரத்து செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே  தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு விவகாரத்தில் கோடிக்கணக்கான ரூபாய் புரண் டது  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது கேள்வித்தாள் வெளியாகி இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி