பொறியியல் பட்டப்படிப்பு ஆன்லைன் கலந்தாய்வு : இன்று முதல் விண்ணப்பம் பதிவு

சென்னை

பொறியியல் பட்டப்படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை ஆன்லைனில் நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.  வரும் ஜூலை மாதம் முதல் வாரம் இந்த ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற உள்ளது.   மாணவர்கள் வீட்டில் இருந்த படியே கலந்தாய்வில் பங்கேற்க முடியும்.

இதற்கான விண்ணப்பத்தினை  இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை பதிவு செய்யலாம்.  விண்ணப்பத்தை பதிவு செய்யும் முறைகள் குறித்த விவரங்களை  அண்ணா பல்கலைக்கழகம் புதன் கிழமை வெளியிட்டது   அது தவிர மாணவர்களுக்கு உதவ 42 உதவி மையங்கள் தொடங்கப் பட்டுள்ளன.   இந்த மையங்களில் மாணவர்கள் சான்றிதழை சரி பார்க்கும் பணிகளும் நடைபெற உள்ளது.

இது குறித்த மேல் விவரங்களுக்கு www.annauniv.edu என்னும் இணையதளத்தை பார்த்து அறிந்துக் கொள்ளலாம்.

You may have missed