புயல் பாதித்த பகுதிகளில் ஒத்திவைக்கப்பட்டது: அண்ணா பல்கலை மறு தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை:

ஜா புயல் பாதிப்பு காரணமாக அதிக  அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் சில மாவட்டங்களில்  ஒத்தி வைக்கப்பட்டன.  தற்போது அந்த தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். ஆனால், கடந்த 16ந்தேதி தமிழகத்தில் வீசிய கஜா புயல் காரணமாக நாகை, தஞ்சை, திருவாரூர் உள்பட 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. அதன் காரணமாக ஒருசில மாவட்டங்களில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், புயல் பாதித்த மாவட்டங்களில் ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெற உள்ள தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

கஜா புயல் பாதிப்பு காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மறு தேதிகளை பல்கலைக்கழகம் இப்போது அறிவித்துள்ளது.

அதன்படி, நவம்பர் 22ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 18ம் தேதியன்றும், நவம்பர் 23 தேர்வுகள் டிசம்பர் 19 ம் தேதியும், நவம்பர் 24ம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 20 ம் தேதியும் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி