ரஜினியின் ‘அண்ணாத்த’ பொங்கலுக்கு ரிலீஸ் என அதிகாரபூர்வ அறிவிப்பு…..!

--

தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைத்துள்ளனர்.

வெற்றி ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டராகப் பணியாற்றவுள்ளார். டி.இமான் இசையமைக்க, விவேகா பாடல்கள் எழுதுகிறார்.

இப்படத்தில் காமெடியனாக நடிகர் சூரி இணைந்துள்ளார். இதில் ரஜினியுடன் நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகை மீனா , குஷ்பூ , ஸ்ரீமன் மற்றும் விஸ்வாந்த் நடிக்கின்றனர் .

இப்படம் அக்டோபர் மாதம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு நடத்தப்படவில்லை. இதனால் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகாது என்று செய்திகள் வெளியானது.

தற்போது அண்ணாத்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.