‘அண்ணாத்த’ படப்பிடிப்பு வரும் 10ம் தேதி ஹைதராபாத்தில் துவங்கும் ….!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி . கொரோனா வைரஸ் பிரச்சனையால் தடைப்பட்டிருந்த படப்பிடிப்பு மீண்டும் துவங்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் அண்ணாத்த ஷூட்டிங் துவங்கவிருக்கிறது.

ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடக்கவிருக்கும் படப்பிடிப்பில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். ரஜினியும் 10ம் தேதி நடக்கவிருக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம்.

ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் தொடர்பான காட்சிகளை தான் முதலில் படமாக்கவிருக்கிறாராம் சிவா.