‘அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்….!

சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு உட்பட ஏராளமானவர்கள் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது. விரைவில் படப்பிடிப்பை முடித்து, நவம்பரில் தீபாவளியை முன்னிட்டு அண்ணாத்த படத்தை வெளியிட உள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது .

இந்நிலையில் சிவா ரஜினிகாந்த் இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே விஜய் – நெல்சன் திலீப் குமார் படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியதை போட்டோ மூலம் அறிவித்திருந்தது சன் பிக்சர்ஸ்.

‘அண்ணாத்த’ திரைப்படம் 2021-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.