‘அண்ணாத்த’ ரிலீஸ் தேதி அறிவிப்பு…..!
சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14-ம் தேதி மீண்டும் தொடங்கியது.
டிசம்பர் 23-ம் தேதி படக்குழுவில் இருந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அண்ணாத்த படப்பிடிப்பு 6 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகின. தமிழகத்தில் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் , தேர்தல் முடிந்தவுடன் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் தான் அண்ணாத்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது .
இந்நிலையில் அண்ணாத்த திரைப்படம் 2021-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
#Annaatthe will be releasing on November 4th, 2021!
Get ready for #AnnaattheDeepavali! @rajinikanth @directorsiva @KeerthyOfficial @immancomposer pic.twitter.com/NwdrvtVtSE— Sun Pictures (@sunpictures) January 25, 2021