பதறியடித்து சென்சார் போர்டு நீக்கய  ஜி.எஸ்.டி. பாடல்

--
விஜய் ஆண்டனி – அருண் பாரதி

மெர்சல் படத்தில் மத்திய பாஜக அரசின் ஜி.எஸ்.டி. வரி, பண மதிப்பிழப்பு ஆகியவற்றை விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாக பாஜக தலைவர்கள் ஆவேச அறிக்கைவிட.. பெரும் பிரச்சினை ஆனது எல்லோருக்கும் தெரியும். அப்போது, “மத்திய பாஜக அரசால் நியமிக்கப்படும் சென்சார் போர்டு உறுப்பினர்கள் இந்தக் காட்சிகளுக்கு எப்படி அனுமதி அளித்தார்கள்” என்றும் ஒரு கேள்வி எழுந்தது.

அதிலிருந்து சென்சார்போர்டு ரொம்பவே சுதாரிப்பாக இருக்கிறது போலும்.

விஜய் ஆண்டனி நடிக்கும் “அண்ணா துரை” படம், வரும் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தில் ஒரு காதல் பாட்டு. கவிஞர் அருண்பாரதி எழுதியிருக்கிறார்.

காதலி தன்னை பாடாய்ப்படுத்துகிறாள் என்று அர்த்தம் தொணிக்கும்படியான பாடல்.

அதை, “ஜி.எஸ்.டி. மாதிரி வந்து என்னை வச்சு செய்யற…. சொல்லாம கொள்லாம வந்து என்னென்னமோ செய்யற..” என்று பாடல் வரிகள் துவங்குகின்றன.

இதைக் கேட்டதும், சென்சார் போர்டு அதிகாரிகள் பதறிப்போய்விட்டார்களாம். “இந்தப் பாடலே படத்தில் இருக்கக்கூடாது” என்று சொல்லியிருக்கிறார்கள்.

“வேண்டுமானால் ஜி.எஸ்.டி. என்று வரும் வரிகளை மியூட் செய்து விடுகிறோம்” என்று படக்குழு சார்பில் சொல்லியிருக்கிறார்கள்.

 

ஆனால், “ஏற்கெனவே இந்தப் பாடல் வெளியாகி விட்டது. ஆகவே மியூட் செய்தாலும் ஜி.எஸ்.டி. என்பது அனைவருக்கும் தெரியும். ஆகவே நீக்கினால்தான் சர்டிபிகேட் தருவோம்” என்று ஒற்றைக்காலில் நின்றிருக்கிறது சென்சர் போர்டு. ஆகவே வேறு வழியில்லாம் அந்த பாடலை படத்தலிருந்து நீக்கிவிட்டார்கள்.

 

 

அந்த பாடலைக் கேளுங்களேன்…