அண்ணா 51வது நினைவுநாள்: பிப்ரவரி 3ந்தேதி ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!

--

சென்னை:

பேரறிஞர் அண்ணா 51வது நினைவுநாளை முன்னிட்டு, கழக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறும் என்று சென்னை மாநகர திமுக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தை தோன்றுவித்தவருமான பேரறிஞர் அண்ணா மறைந்த 51 ஆண்டுகள் ஆகிறது. அவரை போற்றும் வகையில்,  பிப்ரவரி-3 அன்று, திமுக அமைதிப் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை முதல் அண்ணா சதுக்கம் வரை அமைதி பேரணியாக சென்று பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி’ என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.