பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: அண்ணா உருவச்சிலைக்கு ஸ்டாலின் மரியாதை

சென்னை:

றைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர்  அண்ணாதுரையின் 111வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினார்.

அண்ணாதுரையின் 111வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா மார்பளவு உருவச் சிலைக்கு மரியாதை செலுத்துவதற் காக திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் இன்று காலை அங்கு சென்றார். அப்போது அவருக்கு திமுக சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இதை அடுத்து அண்ணாவின் சிலைக்குக் கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மு.க.ஸ்டா லின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சிலைக்கு மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து திமுக தலைமை அலுவலகமான, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவருடைய உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கார்ட்டூன் கேலரி