அண்ணா பல்கலை மறுமதிப்பீடு முறைகேடு: 10 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி

சென்னை:

ண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்ற  மறுமதிப்பீடு முறைகேடு தொடர் பான புகாரில் கைது செய்யப்பட்டுள்ள  10 பேரின் ஜாமின் மனுக்கள் திரும்பப் பெற்றதால்  தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் உள்ள 500க்கும் மேற்பட்ட உறுப்பு கல்லூரிகளின் அண்ணா பல்கலைக்கழகமே நடத்தி மதிப்பெண் வழங்கி வருகிறது. இதில் விடைத்தாள் திருத்துவதில் முறைகேடு நடைபெற்று வருவதாக பல ஆண்டுகளாக புகார் கூறப்பட்டது.

செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் வழங்கும் பலஆயிரம் பணத் துக்கு தகுந்தவாறு மதிப்பெண்கள் வழங்கப்படுவதாகவும், அதிக மதிப்பெண் கோரியும், செமஸ்டரில் தோல்வி அடைந்தவர்கள் மறுமதிப்பீடு கோரியும் மனுக்கள்  தாக்கல் செய்யும்போது, மாணவ மாணவிகளிடம் அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள்  பணம் பெற்றுக்கொண்டு, அதன் மூலம் அதிக மதிப்பெண்கள் வாங்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இதில்  கோடிக் கணக்கான ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த புகார் தொடர்பாக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சார்பில், ஜாமின் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்தி ருந்தனர். இந்த வழக்கில் புலன் விசாரணை நிலுவையில் இருப்பதாக அரசு தரப்பில்  தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜாமின் தாககல் செய்தவர்கள் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். இதைத்தொடர்ந்து ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்வதாக உயர்நீதி மன்றம் அறிவித்தது.