‘அண்ணாத்த’ படத்தின் ஓப்பனிங் பாடலை பாடியிருக்கும் எஸ்.பி.பி ….!

--

தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது .

இதனிடையே திடீரென்று நேற்று (செப்டம்பர் 24) அவருடைய உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. அவருக்கு ஏற்கெனவே இருந்த நுரையீரல் தொற்று திடீரென்று அதிகரிக்கவே மிகவும் மோசமான நிலைக்கு அவரது உடல்நிலை சென்றது. மேலும், மூளையிலும் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவருடைய உயிர் இன்று (செப்டம்பர் 25) மதியம் 1.04 மணிக்குப் பிரிந்தது.

எஸ்.பி.பி. மறைவுக்கு அரசியல் தலைவர்கள் , திரையுலகினர் மற்றும் அவர் ரசிங்கர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் .

இந்நிலையில் இவரது குரலை நாம் மீண்டும் திரையில் கேட்கப்போகிறோம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் நிலையில், இப்படத்தின் ஓப்பனிங் பாடலை எஸ்.பி.பி பாடியுள்ளார்.