தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘அண்ணாத்த’. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது .

இப்படம் அக்டோபர் மாதம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு நடத்தப்படவில்லை. இதனால் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகாது என்று செய்திகள் வெளியானது.

 

சென்ற மாதம் அண்ணாத்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது .
கொரோனா நிலவரம் சரியாகி மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பினாலும் தியேட்டர்கள் திறக்க தாமதம் ஆகும் என்பதால் மீண்டும் அண்ணாத்த படம் ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைக்க முடிவு செய்துள்ளதாகவும் அதனால் அடுத்தாண்டு கோடை விடுமுறையில்தான் இப்படம் ரிலீஸ் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது .