‘அண்ணாத்த’ படப்பிடிப்பு முடிந்து விரைவில் சென்னை திரும்பும் ரஜினி…..!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் ரஜினி நடித்து வருகிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

கொரோனாவால் பலமுறை தடைபட்ட படப்பிடிப்பு, தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது.

ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொள்வதால் வழக்கத்தை விட பல மடங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. படப்பிடிப்பில் பங்கேற்பவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.

இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு முடிந்து ரஜினி சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.