அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி அறிவிப்பு 

ஜா புயல் காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், தள்ளிவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் டிசம்பர் 18, 19 மற்றும் 20 தேதிகளில் நடைபெறும் என பல்கலை கழக பதிவாளர் அறிவித்திருக்கிறார்.

கடந்த 16-ஆம் தேதி வீசிய கஜா புயல் காரணமாக, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட   எட்டு மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள், லட்சக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல்லாயிரம் கால் நடைகளும் பலியாகின. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்தன.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு சிதைந்தது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டன.  தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், புயல் காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் டிசம்பர் 18, 19 மற்றும் 20 தேதிகளில் நடைபெறும் என பல்கலை கழக பதிவாளர் அறிவித்திருக்கிறார்.