தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ் படம் ‘ஜோக்கர்’

டில்லி:

 64-வது தேசிய திரைப்பட விருதுகள் பற்றிய விவரங்களை மத்திய அரசு இன்று அறிவித்ததுள்ளது.

இயக்குநர் ப்ரியதர்ஷன் தலைமையிலான குழு இந்த  விருதுகளை அறிவித்து வருகிறது.

இதில்,  சிறந்த தமிழ் படமாக ஜோக்கர் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதில் சிறந்த திரைப்பட எழுத்தாளருக்கான தேசிய விருது தனஞ்செயனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லதாமங்கேஷ்கர் வாழ்க்கையை எழுதிய லதா சுர்கதாவிற்கு சிறந்த சினிமா புத்தக விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.‘ தர்மதுரை படத்தில் எந்தப்பக்கம் என்ற பாடலை எழுதியதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா நடித்த 24 திரைப்படத்திற்கு இரண்டு விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2016-ன் சிறந்த ஒளிப்பதிவாளர் மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்காக விருது 24 திரைப்படத்திற்கு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

சிறந்த ஸ்டன்ட் மாஸ்டருக்கான தேசிய விருது பீட்டர் கெயினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புலி, ரஜினி முருகன் படத்தில் பணியாற்றிய பீட்டர் கெயின் சிறந்த ஸ்டன்ட் மாஸ்டர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய விருது  1954ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. தற்போது  இவ்விருதினை இந்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்கம் 1973ம் ஆண்டு முதல் நிர்வகித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.