பகுதிநேர ரேஷன் கடைகள் குறித்து விரைவில் அறிவிப்பு: அமைச்சர் செல்லூர் ராஜு

சென்னை: பகுதிநேர ரேஷன் கடைகளுக்கான கோரிக்கை எழும் இடத்தில், நடமாடும் ரேஷன் கடைகள் அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு.

சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது இதனைத் தெரிவித்தார் அமைச்சர்.

திமுக சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார் அமைச்சர். “அதிக இடங்களிலிருந்து பகுதிநேர ரேஷன் கடைகளை அமைக்க கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பாக தற்போது பகுதிநேர ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.

அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. பகுதிநேர ரேஷன் கடைகளை அமைப்பதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியரே பிறப்பிக்க முடியும். அந்த விதியில் எந்த மாற்றமும் இல்லை.

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்குவது தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு குறித்து மாநில அரசு உரிய நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்றார்.