சென்னையில் இன்று மேலும் 14 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…

சென்னை:

சென்னையில் இன்று மேலும் 14  கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,45,859ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாடிளில் மட்டும் 97 பேர் உயிரிழந்தனர்.  இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,935 ஆக அதிகரித்துள்ளது.

அதிபட்சமாக சென்னையில், நேற்று  ஒரே நாளில் 1,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதியா  சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 99,794 ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை 84,916 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.  12,765 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இதுவரை 2113 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்த நிலையில், இன்று மேலும் 14பேர் சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளனர்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேரும், கே.எம்.சி மருத்துவமனையில் 2 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 2 பேரும் மற்றும் தனியார் மருத்துவமனையில் 2 பேரும்  உயிரிழந்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி