அமெரிக்க ஓபன் டென்னிஸ் – மேலும் இருவர் விலகல்!

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து உக்ரைனின் ஸ்விடோலினா மற்றும் நெதர்லாந்தின் பெர்டன்ஸ் ஆகியோர் கொரோனா அச்சத்தால் விலகியுள்ளனர்.

இதன்மூலம், தொடக்கத் தேதி நெருங்கிவரும் நிலையில், அப்போட்டித் தொடரிலிருந்து விலகும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

ஏற்கனவே, ஆண்கள் நடப்பு ஒற்றையர் சாம்பியன் ரஃபேல் நாடல், ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, ஸ்விஸ் நாட்டின் லாவ்ரின்கா உள்ளிட்ட பலர் விலகியுள்ளனர். காயம் காரணமாக, ரோஜர் ஃபெடரரும் தொடரில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், மேலும் இருவர் விலகுவதாக அறிவித்துள்ளதானது, தொடர்புடைய வட்டாரத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மேலும், இப்படி தொடர்ச்சியாக நட்சத்திரங்கள் விலகும் நிலையில், அப்போட்டித் தொடர் எப்படி சுவாரஸ்யமாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கார்ட்டூன் கேலரி