உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவி மேலும் 6 மாதம் நீட்டிப்பு

 

சென்னை:

மிழக சட்டமன்றத்தின் இன்று,  உள்ளாட்சி அமைப்புகளின்  தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தற்போது 6வது முறையாக தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016ம் ஆண்டு  அறிவிக்கப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து திமுக தாக்கல் செய்த வழக்கு காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த கோர்ட்டு தடை விதித்துள்ளது.

ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம்  தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை தொடங்க அறிவுறுத்த நிலையில் வார்டு வரையறை பணிகள் முடிந்ததும், உள்ளாட்சி தேர்தல் குறித்து அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு கூறியது.

உள்ளாட்சி தேர்தல் குறித்து இதுவரை அரசு எந்தவித அறிவிப்பும் வெளியாத நிலையில், உள்ளாட்சித்துறை தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 5 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், இன்று 6வது  முறையாக பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி