ஹைதி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 12 பேர் உயிரிழப்பு

ஹைதி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 12பேர் உயிரிழந்துள்ளனர். 188 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சக்ம் தெரிவித்துள்ளது.

haiti

கரீபியன் தீவுகளில் அமைந்துள்ள ஹைதி நாட்டில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானது. இந்த பாதிப்பு அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் தரப்பில் தெரிவிப்பதாவது, “ ஹைதியில் சனிக்கிழமை இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திற்கு இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். 188 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது ” என்று கூறிப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் குறித்து ஹைதி பிரதமர் ஜின் ஹென்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் ” உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். வடக்குப் பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருகிறது ” என்று பதிவிட்டுள்ளார்.

பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் ஹைதி நாடு அவ்வப்போது இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. 2010ம் ஆண்டு ஹைதி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.