மும்பை: இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடந்த மூன்றாவது டி-20 போட்டியில், ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக இந்தியக் கேப்டன் கோலிக்கு அதிகாரப்பூர்வ எச்சரிக்கையும், ஒரு ஒழுங்கீனப் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய இன்னிங்ஸின்போது கோலி பேட்டிங் செய்துகொண்டிருக்க‍ையில், தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் பியூரன் ஹென்ட்ரிக்ஸை நோக்கி தனது தோள்பட்டையின் மூலம் ஒழுங்கீன சலுகை காட்டினார் கோலி.

ஐசிசி ஒழுங்கு நடத்தை விதிகளின்படி, கோலியின் செயல் நிலை 1 விதிமீறலாகும். ஐசிசி ஓழுங்குவிதி சட்டம் 2.22 ஐ மீறுவதாகும் இது.

எனவே, இந்த செயலுக்காக அவருக்கு அதிகாரப்பூர்வ எச்சரிக்கையும், அவரின் ஒழுங்கு நடத்தைப் பதிவில் ஒரு ஒழுங்கீனப் புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான பிரிடோரியா டெஸ்ட் போட்டியின்போது ஒரு ஒழுங்கீனப் புள்ளியும், உலகக்கோப்பையில் ஆஃப்கன் அணிக்கு எதிரான போட்டியின்போது ஒரு ஒழுங்கீனப் புள்ளியும் பெற்றர் கோலி. தற்போது அவரின் பட்டியலில் மூன்றாவது புள்ளி சேர்ந்துள்ளது.