சென்னை:
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சாத்தான்குளம் தந்தை மகன் காவல்நிலையத்தில் உயிரிழந்த விவகாரத்தைத் தொடர்ந்து, அதே காவல்நிலையித்தில்  மாற்றுத்திறனாளியை சரமாரியாக அடித்து உதைத்த புகாரில், குற்றம்சாட்டப்பட்டுள்ள காவல்துணைஆய்வாளர்கள் குறித்து,  தூத்துக்குடி எஸ்.பி. பதிலளிக்க மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள சாத்தான்குளம் தந்தை -மகன் கொலை வழக்கில் இதுவரை உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.பாலகிருஷ் ணன், தலைமை காவலர் முருகன்  உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள காவல்துறையினர்மீது மேலும் பல்வேறு குற்ற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன.  இவர்களின் அராஜகத்துக்கு ஏற்னவே சிலர் தாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,  அங்குற்ற மாற்றுத்திறனாளி ஒருவரை  எஸ்.ஐ.க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் தாக்கியதாக டிசம்பர் 3 இயக்கம் புகார் தெரிவித்துள்ளது.

அய்யாதுரை என்ற மாற்றுதிறனாளியை எஸ்.ஐ.க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் தாக்கி கொடுமைப்படுத்தி இருப்பதாக,  டிசம்பர் 3 இயக்கம் மாற்றுத்திறனாளி ஆணையத்துக்கு புகார் அளித்தது. அதையடுத்து, இதுகுறித்த  புகாரின் அடிப்படையில், 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடி எஸ்பிக்கு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.