பரனூர் சுங்கச்சாவடி கொள்ளை வழக்கு: மேலும் ஒருவர் கைது

பரனூர் சுங்கச்சாவடி கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இங்கு சமீபத்தில், ரூ. 12 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை போனது. இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வந்த காவல்துறையினர், சிசிடிவி பதிவுகளை வைத்து, கொள்ளையர்களை தேடி வந்தனர். ஏற்கனவே சிலர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று காலை முக்கிய குற்றவாளியான வினோத்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர், பல்வேறு கொலை வழக்குகளிலும் தொடர்புடையவர் என்றும், அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி