இன்னொரு ம.தி.மு.க. பிரபலம் தாவுகிறார்?

.தி.மு.க.வில் இருந்து நிர்வாகிகள் வெளியேறி தி.மு.க.வில் இணைவது தொடர்ந்து வரும் நிலையில் இன்னொரு பிரமுகரும் வெளியேற தயாராகிவிட்டதாக தகவல் பரவியிருக்கிறது.

“பாஸ்ட் டிராக்” என்ற பிரபல கால் டாக்சி நிறுவனத்தின் அதிபரான “ரெட் சன்” அம்பிகாபதிதான் அவர்.

download

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக நின்ற “ரெட்சன்” அம்பிகாபதி சொற்ப வாக்குகள் வாங்கி தோல்வி அடைந்தார்.

இவர் அ.தி.மு.க.வில் இணையும் நோக்கத்தோடு, முதல்வர் ஜெயலலிதாவின் அப்பாயிண்ட்மெண்ட்டுக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது.

ரெட்சன் அம்பிகாபதி ஏற்கெனவே தி.மு.க. ஆட்சியில் இருந்த போது, இருமுறை அக்கட்சிக்கு  சென்று சென்று திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.