ஓ.பி.எஸ். பக்கம் வருகிறார் இன்னொரு எம்.பி.?

சத்தியபாமா

ஓ.பி.எஸ். – சசிகலா இடையேயான அதிகாரப் போட்டி உச்சகட்டத்தை எட்டியிருக்கும் சூழலில் பல பரபரப்பான சம்பவங்கள் நடந்துவருகின்றன.

ஏற்கெனவே, அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன், ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு என தெரிவித்துவிட்டார்.இந்த நிலையில் இன்று கிருஷ்ணகிரி எம்.பி.யான பி.ஆர். சுந்தரம், நாமக்கல் எம்.பியான பி.ஆர். சுந்தரம் ஆகியோர் இன்று காலை ஓ.பி.எஸ்ஸை சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் திருப்பூ் எம்.பி.சத்தியபாமாவும் ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவு அளிப்பதாகவும், இதை  விரைவில் வெளிப்படைாக அறிவிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து சத்தியபாமாவின் கருத்தை அறிய அவரைத் தொடர்புகொண்டோம். அவரது செல்போன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. அதே நேரம் சத்தியபாமா தரப்பில் பேசிய சிலர், “ஓ.பி.எஸ்ஸுக்குத்தான் அக்கா (சத்தியபாமா) ஆதரவு தெரிவிப்பார்” என்று கூறினர்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் சத்தியபாமாவுக்கும் ஏற்கெனவே உட்கட்சி பகை உண்டு. செங்கோட்டையன் சசிகலா ஆதரவாளராக தன்னை வெளிப்படுத்திக்கொண்டதால், சத்தியபாமா ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.