சாதி பிரச்சினையைச் சொல்லும் இன்னொரு படம்: பைரவா கீதா

சாதிப் பிரச்சினைகளை சொல்லும் இன்னொரு படம் வெளியாக இருக்கிறது.  நான்கு மொழிகளில் உருவாகியிருக்கும் ராம்கோபால் வர்மாவின் ‘பைரவா கீதா’ படம்தான் இது. வரும்  26ம் தேதி வெளியாகிறது.

இந்திய திரையுலகிலும், அரசியலிலும் பிரபலமானவர்களைப் பற்றி அதிரடியான கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து சர்ச்சைகளில் சிக்குபவர் இயக்குநர் ராம்கோபால் வர்மா. இவரது படங்களும் சர்ச்சையைக் கிளப்பும். .

இவர் தன்னுடைய தயாரிப்பில் பெரும்  பொருட்செலவில் பைரவா கீதா என்ற படத்தை தயாரித்திருக்கிறார். இதில் புதுமுகங்கள் தனஞ்ஜெயா நாயகனாகவும், ஈரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்.  இந்த படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் தாதூலு என்பவர் இயக்கியிருக்கிறார்.

சாதீய பிரச்சினைகளைச் சொல்லும் அதிரடியான  காதல் கதையாம் இது.  இப்படம் இந்தி, மிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரே சமயத்தில்  வெளியாக இருக்கிறது.

கார்ட்டூன் கேலரி