a
 
சென்னை:
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில், கோபிச்செட்டிபாளையம் தொகுதி பாமக வேட்பாளர் குப்புசாமி இன்று அதிமுகவில் சேர்ந்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நாங்குநேரி வேட்பாளர் திருப்பதி நேற்று, நெல்லை அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான, நயினார் நாகேந்திரன் முன்னிலையில், அதிமுகவில் சேர்ந்தார்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில், கோபிச்செட்டிபாளையம் தொகுதி பாமக வேட்பாளர் குப்புசாமி இன்று அதிமுகவில் சேர்ந்துவிட்டார்.
ஏற்கனவே மடத்துக்குளம் தொகுதி பாஜக கூட்டணி கட்சியான அகில இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழகம் வேட்பாளர் முத்துக்குமார்  அதிமுகவில் சேர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது