வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரிசெலுத்திய மற்றும் இதர நிதிசார்ந்த விபரங்களை, நியூயார்க் நகர வழக்கறிஞர் பெறலாம் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது, டிரம்ப்பிற்கு ஏற்பட்டுள்ள பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஆனால், இதுதொடர்பான விபரங்களை வெளியிட டிரம்ப் மறுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மன்ஹாட்டன் மாவட்ட அட்டர்னி ஜெனரல் சைரஸ் வேன்ஸிடம், டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால அக்கவுண்டிங் நிறுவனமான மஸார்ஸ் யுஎஸ்ஏ என்பதன் நிதிசார்ந்த விபரங்களை தெரிவிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவையடுத்து, “பணிகள் தொடர்ந்து கொண்டுள்ளன” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் சைரஸ் வேன்ஸ்.