கர்நாடாகவின் கம்பளா போட்டி: சீனிவாச கவுடாவின் சாதனையை முறிடியத்த மற்றொரு இளம் வீரர்

பெங்களூரு: கம்பளா பந்தயத்தில் சீனிவாச கவுடாவின் சாதனையை முறிடியத்து இருக்கிறார் மற்றொரு இளம் வீரர், அவர் பெயர் நிஷாந்த் ஷெட்டி.

உடுப்பியில் நடைபெற்ற கம்பளா போட்டியில் சீனிவாச கவுடா, இருபுறமும் மாடுகளை கட்டியபடி சேற்றில் 145 மீட்டர் இலக்கை மிக குறைந்த அதாவது 13.61 வினாடியில் அடைந்து முதல் பரிசை பெற்றார். அவரது இந்த வேகம், ஒலிம்பிக்கில் ஓட்ட பந்தயத்தில் பதக்கங்களை குவித்த உசேன் போல்ட்டின் வேகத்தையும் மிஞ்சிவிட்டதாக பேசப்படுகிறது.

அடுத்த ஒலிம்பிக் போட்டியில் அவரை பங்கேற்க வைக்க பயிற்சி வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அவரின் சாதனை மூலம் அவர் ஒரே நாளில் கர்நாடகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் புகழ் பெற்றார்.

சீனிவாசகவுடாவை முதலமைச்சர் எடியூரப்பா பெங்களூருவுக்கு அழைத்து பாராட்டினார். பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் விருந்தினர் அரங்கத்தில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது.

இந் நிலையில் சீனிவாசகவுடா சாதனையை மற்றொரு வீரர் நிஷாந்த் ஷெட்டி என்பவர் முறியடித்து இருக்கிறார். வேனூரில் நடைபெற்ற கம்பளாவில், நிஷாந்த் ஷெட்டி கவுடாவை விட மூன்று வினாடிகள் வேகத்தில் வெறும் 9.52 வினாடிகளில் 100 மீட்டர் இலக்கை கடந்தார்.

சுவாரஸ்யமாக, அதே கம்பளாவில் பங்கேற்ற அக்கேரி சுரேஷ் ஷெட்டி மற்றும் இர்வதுரு ஆனந்த் ஆகிய இருவருமே 9.57 வினாடிகளில் தூரத்தை கடந்தார்.

இது பற்றி நிஷாந்த்  ஷெட்டி கூறுகையில், மிகவும் சிறப்பான நிகழ்ச்சி, அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.