இன்னொரு ஆயிரம் கோடி ரூபாய் சிலையை பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்!

--

தராபாத்தில் ராமானுஜருக்கு ரூ. 1000 கோடி செலவில் பிரமாண்ட சிலை கட்டப்பட்டு வருகின்றது.  இதையும் பிரதமர் மோடி திறந்துவைக்க ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்படுகிறது.


தெலுங்கானா மாநிலத்தில்  ஐதராபாத்தில் கடந்த 2014ம் வருடம்  மே மாதம் 2ம் தேதி இந்த பிரமாண்ட சிலையை கட்டும்  பணி துவங்கப்பட்டது. நான்காண்டு கால பணிகளுக்குப் பிறகு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.    விரைவில் இந்த சிலை திறக்கப்பட இருக்கிறது.  அப்படி திறக்கப்பட்டால், உலகின் மிக உயர்ந்த சிலைகளில் இரண்டாவது இடத்தை இந்த சிலை பிடிக்கும்.

பீடத்துடன் சேர்த்து மொத்த உயரம் 302 அடி, சிலையின் உயரம் மட்டும் 216 அடி.

ஆயிரம் வருடங்களுக்கு  முன்னரே தீண்டாமைக்கு எதிராக களத்தில் இறங்கி போராடியவர் வைணவ குரு ராமானுஜர்.  இவர் திருவரங்கம், திருமலை, மேல்கோட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல கோயில்களுக்கு நேரடியாக சென்று பூஜை நடைமுறைகளை நெறிப்படுத்தி வழிநடத்தி செயல்படுத்யவர் ஆவார்.

 

அவரது பஞ்சலோக சிலை  அவரது ஆயிரமாவது ஜெயந்தி விழாவை (2017 – 18) முன்னிட்டு நிறுவப்பட்டு வருகின்றது. இந்த சிலையையை பிரதமர் மோடி திறந்து வைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்த திட்டம் திருதண்டி சின்ன ஜீயர் தலைமையில் நடைபெற்று வருகிறது.  பணிகள் குறித்த காலத்தில் நிறைவடையாததால் சிலை திறப்பது அடுத்த வருடத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

3000 கோடிக்கு சர்தார் வல்லபாய் படேல் சிலையை திறந்து வைத்த மோடி, இந்த சிலையையும் விரைவில் திறக்க இருப்பதாக கூறப்படுகிறது.

You may have missed