Random image

பொன்னம்பலத்தை தொடர்ந்து மற்றொரு நடிகர் கதறல்.. ’சாப்பாட்டுக்கே வழியில்லை உதவி செய்யுங்கள்..’

வில்லன் நடிகர் பொன்னம்பலம் கடந்த மாதம் சிறுநீரக பாதிப்பால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டார். அப்போது தனக்கு மருந்து வாங்க கூட காசில்லை. மருத்துவ செலவுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து கமல், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்கள் அவருக்கு உதவினர்.
இந்நிலையில் மற்றொரு வில்லன் நடிகர் சூர்யகாந்த் மருந்து வாங்க கூட காசில்லை பட்டினியால் வாடுகிறேன் என தெரிவித் திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூரல் நின்னு போச்சு படத்தில் வில்லனாக அறிமுகனானவர் சூர்யகாந்த், அவர் கூறும் போது,’தூரல் நின்னு போச்சு’, மண் வாசனை, கிழக்குச் சீமையிலே, கைதி, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்தேன். தற்போது படப்பிடிப்புகளும் இல்லை. டிவி படப் பிடிப்பும் சரியாக நடக்கவில்லை. பொரு ளாதார ரீதியாக வருமாணம் இல்லாமல் பாதிக்கப்பட்டிருக்கிறேன் சர்க்கரை நோய் பாதிப்புக்கு மருந்து வாங்கக் கூட பணம் இல்லை. சாப்பாட்டுக்கும் வழியில்லை. தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்’ என தெரிவித்திருக்கிறார்.