விபத்தில் சிக்கிய கிராமியப் பாடகி கொல்லங்குடி கருப்பாயி…..!

பிரபல நாட்டுப்புற பாடகியும், திரைப்பட நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி, நேற்று இரவு திடீர் என என விபத்து ஒன்றில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது….

விபத்தில் சிக்கிய நிலையில், வறுமை காரணமாக அறுவை சிகிச்சை செய்ய பணமின்றி தவித்து வருகிறார்.

கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, இருசக்கர வாகனம் அவர் மீது மோதியதால், அவரது கால் எலும்பு முறிந்தது. காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவ செலவுக்கு பணம் இல்லாத காரணத்தால், அறுவை சிகிச்சை செய்து கொள்ளாமல், கட்டு மட்டும் போட்டுக் கொண்டு வீடு திரும்பினார்.

கொல்லங்குடியை சேர்ந்த கிராமியப் பாடகியான கருப்பாயி, ஆண்பாவம், ஆயுசு 100, கோபாலா கோபாலா போன்ற படங்களில் நடித்துள்ளார்.