இடாநகர்:

லகின் உயரமான சிகரமான இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் நான்காவது முறையாக ஏறி சாதனை படைத்துள்ளார் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர்.

மலை ஏறும் வீராங்கணை அன்சு ஜாம்சென்பா அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர். இவர்  கடந்த 6 ஆண்டுகளில் 4வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

பெண் 32 வயதான அன்சுஜாம்சென்பா எனப்வர் அருணாச்சால பிரதேசம் பொம்டிலா நகரை சேர்ந்தவர். அவருக்கு டீன் ஏஜ் வயதில் 2 மகள்கள் உள்ளனர்.

இவர் முதன்முறையாக கடந்த 2011ம் ஆண்டு மே.12ந்தேதி, உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டில் ஏறினார்.

அதைத்தொடர்நது10 நாள் இடைவளியில் மீண்டும் எவரெஸ்ட் உச்சிக்கு சென்றார்.

அதைத்தொடர்ந்து கடந்த 2013ம் ஆண்டு மே.18ந்தேதி 3வது முறையாக எவரெஸ்ட் உச்சிக்கு சென்றார்.

தற்போது அவர் 4வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

இவரின் சாதனையை அருணாச்சல முதல்வர் பீமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.